காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே ?
கண்ணீர் ஏன் மனமே ?
1.
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே (2) – காக்கும்
2.
சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள் மனமே
சீடன் அவன் தானே – காக்கும்
3.
பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம் – காக்கும்
4.
காண்கின்ற உலகம் நமது இல்லை
கானாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு – காக்கும்
5.
சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே – காக்கும்
6.
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலக்காதென்றார்
மனது உருகும் தெய்வம் – காக்கும்